திருநெல்வேலி:
தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சங்கரன்கோவிலில் நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநாடு வலியுறுத்தி உள்ளது.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேள
னத்தின்(சிஐடியு) 2-வது மாநில மாநாடு நவ. 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.முதல் நாள் மாநாடு பேரணி மற்றும் பொது கூட்டத்துடன் துவங்கியது. சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிவழியாக வடக்கு ரதவீதி வந்தடைந்தது. பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சங்க சம்மேளன தலைவர் கே.சி. கோபிகுமார் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் மாடசாமி, ரத்தினவேல், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், விசைத்தறி தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சந்திரன், சிஐடியு மாநில செயலாளர்கள் மகாலெட்சுமி, ஆர்.மோகன், மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் உ.முத்துபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டு வரவேற்புக்குழுத் துணைத் தலைவர் பா.அசோக்ராஜ் நன்றி கூறினார்.                                                                      எம்.அசோகன்                                                                                    2-ம் நாள் பிரதிநிதிகள் மாநாடுநடைபெற்றது. கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கே.சி.கோபிகுமார் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சேகர்அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

வரவேற்பு குழு தலைவர் உ.முத்துபாண்டியன் வரவேற்று பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விசைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எம்.

அசோகன் வரவு-செலவு அறிக்கை                                                                                                                                சமர்ப்பித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர்கள் ஆர்.மோகன், ஆர்.எஸ்.செண்பகம் வாழ்த்தி பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.மாடசாமி நன்றி கூறினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சம்மேளனத் தலைவராக முத்துச்சாமி, பொதுச் செயலாளராக எம்.சந்திரன், பொருளாளராக எம்.அசோகன் மற்றும் 6 துணைத் தலைவர்
கள், 5 செயலாளர்கள் உட்பட 36 பேர் கொண்ட புதிய மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது.                                                                              எம்.சந்திரன்                                                                                தீர்மானங்கள்
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, மாதஊதியம் ரூ.18 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவசமாக பசுமை வீடு கட்டித் தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விசைத்தறி தொழில் உள்ள மாவட்டங்களில் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்.

          பி.முத்துசாமி                                                                                      இலவச மின்சாரம் 750 யூனிட்டை 1000 யூனிட்டுகளாக உயர்த்தி வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு முந்தைய அரசு வழங்கியஊக்கத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். நல வாரிய பென்ஷன் வயதை 50-ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.