தஞ்சாவூர்:
கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி களை நிறைவேற்ற வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங் களுக்கும் தலா ரூ 10 ஆயிரம், தென்னை மரத்திற்கு ரூ 20 ஆயிரம், நெற்பயிருக்கு ரூ 25 ஆயிரம், கரும்பு, வாழைக்கு ரூ 1 இலட்சம் நிவார
ணம் வழங்கிடக் கோரி, பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகங்கள் முன்பும், திரு
வோணம், மதுக்கூர் ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் செவ்வாய்க் கிழமை (நவ.27) நடைபெற்றது.

உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரண நிதியை ரூ 15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உடனடி யாக பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வருவாய் துறை, வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் சென்று மக்களை சந்தித்து அவர்களுடைய பாதிப்புகளை பதிவு செய்திட வேண்டும். அரசு நிவாரணம் அனைத்து பகுதி பொது மக்களுக்கும் முறையாக சென்று சேரு
வதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கிராம பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க மிக விரைவாக மின் கம்பங்களை நட்டு மின்சாரம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள மிகக் குறைவான நிவாரணத் தொகை மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ 20 ஆயிரம், மற்ற வீடுகளுக்கு தலா 10 ஆயிரம், புயல் மற்றும் தொடர்
மழை பாதிப்புகளில் வேலை இழந்து தவிக்கும் அனைத்து விவசாய தொழிலாளர்கள், ஏழை
விவசாயக் குடும்பங்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 ஆயிரம் வழங்கிடவேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

சேத மடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம், வாழை, கரும்பு ஏக்கருக்கு 1 லட்சம் என உயர்த்தி வழங்க வேண்டும். கடலோர மீனவ குடும்பங்களுக்கு சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஏழை எளிய நடுத்தர குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.