பள்ளிபாளையம் :தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில மாநாட்டையொட்டி பள்ளிபாளையத்திலிருந்து சி.வேலுச்சாமி நினைவு ஜோதிப்பயணம் துவங்கியது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) 2 ஆவது மாநில மாநாடு சங்கரன்கோவிலில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கந்துவட்டி கொடுமையை தட்டிக் கேட்டதால் படுகொலை செய்யப்பட்ட பள்ளிபாளையம் சி.வேலுச்சாமி நினைவு ஜோதி ஏற்றப்படுகிறது. இதையொட்டி, நினைவு ஜோதி பயண துவக்க நிகழ்ச்சி புதனன்று மாலை பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அக்ரகாரம் கிளைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு நாமக்கல்மாவட்டச் செயலாளர் ந.வேலுச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் எம்.முத்துகுமார் மற்றும் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் இ.கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.