தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வருவதற்காக பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு உள்ளன. இதனால் கடந்த மாதம் 77 ஆயிரம் மெட்ரிக்டன் சரக்குடன் ஒரு கப்பல் வந்தது. இந்நிலையில் அந்த கப்பலை விட பெரிய பிரம்மாண்டமான ‘ஜியோர் ஜியோ அவினோ’ என்ற சரக்கு கப்பல் புதனன்று வ.உ.சி. துறை முகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் 229.2 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும், 14 மீட்டர் மிதவை ஆழமும் கொண்
டது. இந்த கப்பல் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள மினா சாகர் துறை முகத்தில் இருந்து 82 ஆயிரத்து 170 டன் சுண்ணாம்பு கல் ஏற்றிக் கொண்டு வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து கேப்டர் கிங்ஸ்டன் நீல்துரை, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் பபோடோஸ் சந்த், ஆலோசனையின் பேரில் சரக்கு கப்பல் பாதுகாப்பாக கப்பல் தளத்தை வந்தடைந்தது.

Leave A Reply

%d bloggers like this: