===எம்.கிரிஜா=== 
இணைச் செயலாளர், 
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
ஒசூரிலிருந்து புறப்பட்டு நகரத்தி லிருந்து விலகி இருபுறமும் பச்சைப் பசேலென்ற வயல்களிடையே தார்ச் சாலையில் பயணித்தோம். அடுத்து வந்த கரடு முரடான சாலையில் சிறிது தூரம் சென்ற வாகனம், சூடுகொண்டபள்ளி கிராமத்தை அடைந்தது. வலதுபுறம் திரும்பியவுடன் காவல்துறையினரின் விசாரிப்புகளை முடித்து உள்ளே சென்றோம்.

கீத்துக் கொட்டாய் குளியலறை, ஷீட் போட்ட வீடு(!) … நந்தீஷின் சகோதரியும், தாயும் வெளியே வந்தனர். எங்களோடு வந்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எங்களை அறிமுகப்படுத்தினர். “இந்த கொலைல சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஜெயில்ல போடணும்.. எங்க 15 குடும்பத்துக்கும் பாது காப்பு இல்ல” என கண்ணீர் மல்க நந்தீஷின் குடும்பத்தினர் பேசத் துவங்கினர்.                                             சௌமியா பெற்றோருக்கு ஆறுதல்…                                                               நந்தீஷும், சுவாதியும் திருமணம் செய்து கொண்டு ஒசூரில் வாழ்ந்து வருவதை அறிந்த சுவாதியின் பெரியப்பா, மிகவும் ‘அன்போடும் அக்கறையோடும்’ பழகியிருக்கிறார். குலசாமி கோவிலுக்கு போய் வரலாம் என சொன்னதை அப்பாவியாய் நம்பி அவர்கள் இருவரும் அவரோடு சென்றிருக்கிறார்கள். ஆனால், வழியில் ஏதோ சந்தேகம் ஏற்பட, நந்தீஷ், தான்

வேலைபார்க்கும் முதலாளிக்கு தந்தி வாசகம் போல் குறுஞ்செய்தி அளித்த பின்தான் குடும்
பத்தினருக்கு அவர்கள் ஆபத்தில் சிக்கி யிருப்பது தெரிகிறது.தேடினார்கள், தேடினார்கள்… ஆனால், அவர் களுக்குக் கிடைத்ததோ… முதலில் நந்தீஷின் உயிரற்ற உடலும், இரண்டு நாட்கள் கழித்து, 2 மாத கர்ப்பிணியான சுவாதியின் உடலும் என
அவர்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க மனம் பதைபதைத்தது. தேற்ற வார்த்தைகளின்றி மனம் கனத்தது. ஆதரவின் அடையாளமாக 5000 ரூபாய்களை அக்குடும்பத்தினரிடம் அளித் தோம். சாதி ஆணவக் கொலையை எதிர்த்த அவர்களது போராட்டத்தில் என்றென்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழ ர்கள் உடனிருப்போம் என உறுதியளித்தோம்.பிறகு சிட்லிங் நோக்கி துவங்கியது பயணம். மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகியும், மாதர் சங்கத்தின் செயலாளரும் உடன் வந்தனர். கோட்டப்பட்டியை நெருங்கும்போது, இனி கொஞ்சம் ரோடு மோசமாக இருக்கும் தோழர் என்றார்கள்.

கொஞ்சம் இல்லை, நடுவுல கொஞ்சம் ரோட்டையே காணோம். 20 நிமிட பயணத்தில் சிட்லிங்கில் செளமியாவின் வீட்டை அடைந்தோம். வாசலில் கயித்துக் கட்டில், நெருப்பு கனன்று கொண்டிருந்த மண் அடுப்பு… அக்குடும்பத்தின் ஏழ்மையை எடுத்துரைத்தது. செளமியாவின் தாய், அண்ணி, பாட்டி, அக்கம்பக்கம் இருப்போர் அவசர அவசரமாக உட்கார சேர்களைப் போட்டனர். தன் ஆசை மகளுக்கு நேர்ந்த கொடுமையையும், இழைக்கப்பட்ட அநீதியையும் அழுகையோடு சொன்ன போது, நீரில் மிதக்கும் கண்களோடு கேட்டுக் கொண்டிருந்தோம்.

எங்கள் கண் முன், அதி காரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் உயிரோடு கொல்லப்பட்ட செளமியா முகம் வந்து மனதைப் பிசைந்தது. ஐபிஎஸ் பாசாகி காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற சௌமியாவின் கனவு, இயற்கை உபாதைக் காக ஓடைப்பக்கம் ஒதுங்கியபோது அவளோடு சேர்த்து கலைக்கப்பட்டது சொல்லொணாத் துயரத்தை அளித்தது. அநீதியை எதிர்த்த அவர்களது போராட்டத்தில் என்றென்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தோழர்கள் உடனிருப்போம் என உறுதியளித்து 10,000 ரூபாய்களை அக்குடும்பத்தினரிடம் அளித்தோம்.

கனத்த இதயத்தோடு சிட்லிங்கிலிருந்து ஆத்தூருக்குப் புறப்பட்டோம்.வனத்துறையின் காடுகளினிடையே பயணித்த பின் ஆத்தூரின் தளவாய்பட்டியை அடைந்தோம். நெடுஞ்சாலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜலட்சுமி வீடு நோக்கி பய ணித்தோம். இருபுறமும் வயல்வெளிகளில் சோளம், பருத்தி, மரவள்ளிகிழங்கு, மஞ்சள் பயிரி
டப்பட்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்று மாக இருந்தன வீடுகள். அப்போது ஒரு வீட்டுக்கு போற வழி முட்களும், கம்பிகளும், கட்டைகளும் போட்டு மறிக்கப்பட்டிருந்தது.                                           ஆத்தூர் இராஜலட்சுமி பெற்றோருடன் சந்திப்பு….                                             உடன் வந்த மாதர் சங்க சகோதரியிடம் கேட்டபோது இதுதான் ராஜலட்சுமிய கொன்னவன் வீடு என்றார். ராஜலட்சுமி வீட்டை அடைந்தோம். தமிழகத்தையே உலுக்கிய படுகொலை
யைச் சந்தித்த அந்தச் சிறுமியின் தாயும், தந்தை யும், சகோதரியும் சகோதரனும் நடந்ததை விவ
ரித்தபோது மனம் பதைபதைத்தது. பாப்பா வோட தலையில்லாத ஒடம்பு இங்கதாம்மா துடிச்சுச்சு என அத்தாய் கை காட்ட அவரோடு நாங்களும் துடிதுடித்துப் போனோம். சாதி வெறிக்கெதிரான போராட்டத்தில் நாமும் அவர்களோடு உள்ளோம் என்று சொல்லி, 5000 ரூபாய்களை அளித்து விடை பெற்றோம். அப்போது அங்கிருந்த காவலர்கள் கண்களில் நன்றி ஒளிர்ந்ததை கண்டோம்.நம்ப வைத்து பயங்கரமாக படுகொலை செய்த சுவாதியின் சாதி ஆணவப் பெரியப்பாவும் இதர குற்றவாளிகளும் காதும் காதும் வைத்தாற்போல் வழக்கை முடித்து குற்ற வாளிகளை காப்பாற்ற சௌமியாவின் குடும்பத்தாரை வஞ்சித்து பாலியல் வன்கொலைக்குத் துணைபோன காவல்துறை, அரசு மருத்துவ மனை, பெண்கள் காப்பகம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள்; 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கழுத்தை துள்ளத் துள்ள, துடிக்கத்துடிக்க கொன்ற சாதி ஆணவவெறிபிடித்த கயவன்… இவர்களை எதிர்த்த போராட்டத்தில் களம் கண்டு வரும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய, சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உள்ளோம் என பல்லாயிரம் உறுப் பினர்கள் சார்பில் உறுதியளித்த நிறைவு மன தில் ஏற்பட்டது.

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொருளாளர் கோபிநாத், எல்ஐசி தென்மண்டல உழைக்கும் மகளிர் குழு இணை அமைப்பாளர் எம்.விஜயா, சேலம் கோட்டச் சங்க பொதுச்செயலாளர் கலிய பெருமாள், தலைவர் லக்ஷ்மி சிதம்பரம், சேலம் கோட்ட மகளிர் துணைக்குழுவின் அமைப் பாளர் பொன்மொழி, கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஷோபனா ஆகியோரோடு ஒசூர் கிளை செயலாளர் ஹரிணியும், பொருளாளர் மதுசூதனரெட்டி சேலம் கோட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.