நாமக்கல் : சாலைப் பணியாளர்களின் 42 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என சாலை பணியாளர்கள் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 6 ஆவது மாநாடு சங்க தலைவர் பி.ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச்செயலாளர் கே.கனகராஜ் வரவேற்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் து.சிங்கராயன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் வீ.விவேகானந்தன் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர். இம்மாநாட்டில், சாலைப் பணியாளர்களின் 42 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வுஇதைத்தொடர்ந்து, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.ரவி, மாவட்டச் செயலாளராக எம்.பழனிசாமி, பொருளாளராக பாஸ்கர், துணைத் தலைவர்களாக விஜயன், வேலு, இணைச் செயலாளர்களாக செல்வராஜ், சிவகுமார், மாநில செயற்குழு உறுப்பினராக ஏ.கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, புதிய நிர்வாகிகளை சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ் அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். முன்னதாக, இம்மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கு.ராஜேந்திர பிரசாத், மாவட்டச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கதிர்வேல், வட்ட பொருளாளர் என் தனசேகரன், பொது சுகாதாரத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேலும், இம்மாநாட்டில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.