ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் சூடு கொண்டப்பள்ளியில் நந்தீஸ்-சுவாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நந்திஸ் குடும்பத்துக்கு ஆறுதல் கூற அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க இணைச் செயலாளர் எம்.கிரிஜா, பொருளாளர் கோபிநாத், சேலம் கோட்ட பொதுச் செயலாளர் கலியபெருமாள், தலைவர் லஷ்மி, சிதம்பரம் பகுதி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயா, பொன்மொழி ஆகியோர் சூடுகொண்டப் பள்ளிக்கு வருகை தந்து நந்திஸ் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதி உதவியும் செய்தனர்.நந்தீஸ் அம்மா, அப்பா, சகோதரி, தம்பி இன்னமும் பயம், திகில் நிறைந்த மன நிலையிலிருப்பதை அறிந்த அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா தைரியம் கொடுத்தார்.

இந்த படுகொலைக்கு எதிரான சிந்தனை, செயல்பாடுகள் இப்பகுதியில் அதிகரித்துள்ளது, இடதுசாரி, முற்போக்கு இயக்கங் கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் பயப்பட தேவையில்லை என்றும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கமும் உங்களோடு துணை நிற்கும் என்றார்.உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், மிரட்டல்கள், எதுவானாலும் உங்களுக்கு ஆதரவாக நெருக்கமாக இருக்கும் இயக்கங்களுடன் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளுங்கள். பயப்பட தேவையில்லை என்றும் கூறினர். இந்த சந்திப்பின்போது ஓசூர் காப்பீட்டு ஊழியர் சங்க செயலாளர் ஹரினி, பொருளாளர் மதுசூதன் ரெட்டி, சேதுராமன், சதீஷ், அகிலாண்டேஸ்வரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார், பொருளாளர் சிவபிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பிஜி. மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன், வாலிபர் சங்க வட்டத் தலைவர் ஆனந்த், கட்டுமான சங்க தலைவர் சீனிவாசன், சந்திரசேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.