நாமக்கல்,
நாமக்கல் பரமத்தி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லில் பரமத்தி அருகே மறவம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.  அப்போது அந்த வழியே வந்த மினி லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் மினி லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: