ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தை ஆளுநர் கலைத்திருப்பதற்கு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்து ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

“எதிரெதிரான” சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒரு பொருத்தமான அரசாங்கத்தை அமைத்திட முடியாது என்று முடிவு செய்திடும் வேலை ஆளுநருக்குக் கிடையாது. இந்த அளவுகோலின்படி பார்த்தோமானால், தேர்தலுக்குப்பின்னர் பிடிபி-பாஜக அரசாங்கம் அமைத்திட அனுமதிக்காமல் இருந்திருக்க வேண்டும். எனவே, ஆளுநரின் வேலை என்னவென்றால், தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று கூறும் தலைவரிடம் சட்டமன்றத்தைக்கூட்டி அவையில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று கேட்பது மட்டுமேயாகும்.

மோடி அரசாங்கம், இவ்வாறு எதேச்சாதிகார நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் மாநிலத்தின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியும் மோசமாக்கியும் இருக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: