ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை மற்றும் இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரி இன்று காலை ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இவர்களது பாதிப்பை ஈடு செய்யும் வகையில் பாரதப் பிரதமரின் வேளாண் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரியிருந்தனர்.

இதுவரையும் எந்த இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிகைகளை முன்வைத்து 1000க்கும் மேற்பட்டோர் கொட்டும் மாலையிலும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது .

Leave A Reply

%d bloggers like this: