கடலூர் : தனியார் சர்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் மாநில கோரிக்கை மாநாடு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதை யொட்டி, நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலை முன்பிருந்து பேரணி தொடங்கியது. ஆலை வாயிலில் சங்க கொடியை கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்திய ஒருங் கிணைப்பு குழுவின் அமைப்பாளர் என்.கே.சுக்லா ஏற்றி வைத்தார். பின்னர், ஜி.வீரையன் நினை வரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செ.நல்லாக்கவுண்டர் தலைமை தாங்கினார். இஐடிபாரி ஆலை கரும்புவிவசாயிகள் சங்க செயலாளர் ஆர்.தென்னரசு வரவேற்றார்.

ஏமாற்றும் மத்திய அரசு
கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் என்.கே.சுக்லா மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘கரும்பு டன்னுக்கு ரூ.20 விலை உயர்த்தியுள்ள மத்திய அரசு, பிழிதிறனை 10 சதவீதமாக உயர்த்தி கரும்பு விவசாயிகளை வஞ்சித்துள்ளது’’ என்றார். நாடு முழுவதுமுள்ள சர்க்கரை ஆலைகளிடம் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பாக்கி உள்ளது. கரும்பு உற்பத்தியும் சர்க்கரை உற்பத்தியும் கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பதாக மத்திய அரசு பித்தலாட்டம் செய்கிறது. 2005 ஆண்டு முதல் வேளாண்மைத் தொழிலில் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. கடன் தொல்லையால் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது ஆங்கில உரையை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சுகுமாறன் தமிழாக்கம் செய்தார். மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் சின்னப்பா தீர்மானங்களை முன்மொழிந்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், செயலாளர் கோ. மாதவன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். பாரி ஆலை தலைவர் எம்.மணி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
2013-2014 முதல் 2016-17 வரை மாநில அரசு அறிவித்த கரும்பு பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயி களுக்கு தரவில்லை. நான்காண்டு பாக்கி ரூ.1220 கோடி. இது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செய லாகும். 2017-2015 இல் மத்திய அரசு அறிவித்த விலையில் (எப்ஆர்பி) பத்துதனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.150கோடி வரை அடுத்த அரவை துவங்கிய பிறகும் தராமல் விவசாயி களை அலைக்கழித்து வருகின்றன. தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.1400 கோடியை வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும். விளை பொருட்களுக்கு சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4000 விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வழங்க வேண்டும்.2018-2019 ஆண்டுக்கு மத்திய அரசு 9.5 சதவீதம் கரும்பு பிழிதிறன் விலையாக அறிவித்துள்ளது.

உரத்தின் விலை 25 சதவீதமும், டீசல் விலை 27 சதவீதமும் கடந்த ஆண்டை விட உயர்ந்து உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அறிவித்துள்ள விலை போதுமானதல்ல. கரும்பு விவசாயி களை வஞ்சிக்கும் செயலாகும். கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களில் இருந்தும் கரும்பு விவசாயிகளுக்கு பங்கு அளிக்க வேண்டும், வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். கஜா புயலால் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே பாதித்துள்ளது. நீண்ட கால மரப்பயிர்கள் அடியோடு நாசமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் புனரமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.