திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், விவசாயப் பயிர்கள் மற்றும் உடமைகளை இழந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும் சேதத்தை ஆய்வு செய்யவும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் களத்திற்கு சென்றுள்ளனர். திங்களன்று நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் மக்களைச் சந்தித்த கே.பால கிருஷ்ணன், செவ்வாயன்று திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். திருவாரூர் ஒன்றியம், திருத்துறைப் பூண்டி ஒன்றியம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆப்பக்குடி, கச்சனம், ஆளத்தம்பாடி, தில்லையாடி, சிந்தலாந்தி, பாமனி, கள்ளிக்குடி, பாண்டி, குன்னலூர், கீழப்பெருமலை, குறவறங்செட்டிக் காடு, தில்லைவிளாகம், முத்துப் பேட்டை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்காத அவலம் நிலவுவதை மக்கள் கொதிப்புடன் தெரிவித்தனர். எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்தையும் இழந்து நிற்பதாக அவர்கள் துயரத்துடன் தெரிவித்தனர். கே.பாலகிருஷ்ணனுடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி.பழனிவேல், கே.என்.முருகானந்தம், கே.பி.ஜோதிபாசு, கே.தவமணி, வி.சுப்பிரமணியன், சி.ஜோதிபாசு, திருவாரூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், திருத் துறைப்பூண்டி நகரச் செயலாளர்கள் ரகுராமன், ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.