தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கூறுகையில்: “வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.

இதனால்,அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும்.சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். அடுத்த 24 மணி நேரத்தில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யும்.தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில், கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது”. என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.