திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு சென்ற மத்திய போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அங்கு எப்படியாவது கலவரத்தை தூண்டி விடலாம் என முயற்சித்து பார்த்தார். அது அங்கிருந்து எஸ்பி தலையிட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவமும், எஸ்.பி பொன்னார் உரையாடலும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சபரிமலை பகுதியில் திட்டமிட்டு கலவரத்தை துண்டி ஆளும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க சங்பரிவார் அமைப்புகள் முயன்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக செயலாளர் ஸ்ரீதரன் பிள்ளை சபரிமலையில் பெண்கள் நுழைவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. இந்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாக ஆத்திரமுடன் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் பாஜகவின் ஒரு சதித்திட்டத்தில் ஒரு பகுதியாக இன்று சபரிமலை நிலக்கல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணனன் களத்தில் இறக்கிவிடப்பட்டார்.

அவர் நிலக்கல்லில் தனது படை பாரிவாரங்களுடன் சென்றார். அப்போது ஏற்கனவே சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசை ஒழுங்கு படுத்தும் விதத்தில் பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்படி நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அரசு பேருந்திற்கு மட்டுமே அனுமதி. தனியார் வாகனங்களுக்கு அனுமதிப்பதில்லை என விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தது. காரணம் தனியார் வாகனங்கள் அனைத்தையும் அனுமதிக்கும் பட்சத்தில் மலைப்பகுதி என்பதால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் மண்சரிவும் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாகவே தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நிலக்கல் சென்ற மத்திய போக்குவரத்து இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தனது படை பாரிவாரங்களுடன் அதிகமான வாகனங்களுடன் செல்ல முயன்றார். அப்போது தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அமைச்சர் மற்றும் அரசு பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆதரவாளர் வாகனங்களுக்கு அனுமதியில்லை. இங்கிருந்து அரசு பேருந்தில் செல்லாம் என தெரிவித்தனர்.

உடனே பத்தர்களை தடுக்க கூடாது. அனைத்து தனியார் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரை மிரட்டும் தொனியில் கூறினார். அப்போது பத்தர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த ஏற்பாடு. அதனால் அதற்கு சாத்தியமில்லை என தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த எஸ்பி யதிஷ் சந்திரா ஏற்கனவே இருக்கும் விதிகளை மத்திய அமைச்சருக்கு விளக்கினார். அப்போது பொன்ராதாகிருஷ்ணன்  அரசு பேருந்துகளை அனுமதிப்பது போல், தனியார் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு எஸ்பி, அப்படி அனுமதித்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியுமா என கேட்டார். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றார் பொன்னார். அதுதான் பாயிண்டே..எது நடந்தாலும் அது காவல்துறை மேல் விழும். அதனால்தான் சொல்கிறோம் பொக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவே தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்..

உடனே அருகில் இருந்த பாஜக வினர் எப்படி மந்திரிகிட்ட எப்படி இப்படி பேசலாம்.. யாரிடம் பேசுகிறாய் தெரிகிறதா மந்திரி என்று எஸ்பியை மிரட்டும் தொனியில் சொல்ல . உடனே யதிஷ் சிந்திரா ஆத்திரப்படாமல் ஒரு அடி முன்னெடுத்து வைத்து பேசுபவரின் அருகின் நின்று அப்படியே பார்த்தார்.. மேலும் நான் பேசுகிறேன் பார் என்று கூறி விட்டு மீண்டும் பொன்னாரிடம்.. எல்லோரையும அனுமதிக்கலாம். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமே.. அதனால்தான் இந்த நடைமுறை என்றார். அதையும் மீறி தனியார் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று சொல்வதை எனது உயரதிகாரிகளிடம் சொல்கிறேன் என்றார்.

மீண்டும் பொன்னார் எந்த வானத்தையும் அனுமதிக்காமல் இருந்தால் சரி, ஆனால் அரசு வாகனங்களை மட்டும் அனுமதிப்பது எப்படி என்றார்..?  அதற்கு எஸ்பி, ஏற்கனவே அனைத்து வாகனங்களையும் அனுமதித்து பார்த்தோம். அப்போது இது போன்ற காலங்களில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாகவே இப்போது இந்த நடைமுறையை பின்பற்றுகிறோம் என்றார். மேலும் இது மலைப்பிரதேசம், இது ஒன்றும் தரைத்தளம் அல்ல. அதிகமான வாகனங்களை அனுமதிக்கும் போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சூற்றுசூழல் பாதுகாப்புகுரிய இடம் சார். அதனால் சாலைகளையும் விரிவு படுத்த முடியாது. அப்படியிருக்கும் போது வானங்களை அனுமதித்தால் நிலச்சரிவும் ஏற்படலாம். அது பத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். அதனால்தான் அனுமதிப்பதில்லை என்றார்.

உடனே நான் புரிந்து கொண்டே.. ஆதனால் எனது வாகனத்தையும் நீங்கள் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்றார்.. உடனே எஸ்பி இல்ல சார்.  விஐபி வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நீங்கள் ஒரு அமைச்சர், தற்போதும் அமைச்சர் பதவியில் இருக்கிறீர்கள். உங்கள் வாகனம் போவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதற்கு எந்த தடையும் இல்லை என்று கூறினார்.

உடனே பொன்னார் நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் தேவையில்லாமல் பத்தர்களை துன்புறுத்துகிறீர்கள் என்றார். உடனே எஸ்.பி.. அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கலாம் என எனக்கு உத்தரவு போட்டு, அந்த ஆடர்ரை தாருங்கள்… நான் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கிறேன் என்றார்.

உடனே பொன்னார்.. அப்படி எந்த உத்தரவையும் நான் தரமாட்டேன். அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்றார். உங்கள் அரசு அதனை செய்ய வேண்டும். விட வேண்டும் என்பது எனது கருத்து அவ்வளவுதான் என்றார். உடனே அதனை எழுதி கொடுங்கள் நான் அதனை மாநில அரசிடம் தெரிவிக்கிறேன் என்றார்.

உடனே அங்கிருந்து நகர்ந்து சென்றால் போதும் என்ற நிலையில் அப்படியே திரும்பினார். அப்போது, மீண்டும் எஸ்பி எல்லா வாகனங்களையும் அனுமதித்தால் நிலச்சரி ஏற்படலாம் சார், அது பத்தர்களுக்கு இடையூறாக இருக்கும் சார் என்றார். அப்போது பொன்னார்.. இங்கே பாருங்கள் இந்த வாகனங்கள் எல்லாம் நிலச்சரிவு ஏற்படுத்தவில்லையா என்று கையை நீட்டி காண்பித்தார். அபபோது, சார் அது பார்க்கிங் ஏரியா சார்.. அது பிரச்சனையில்லை சார்.. நான் சொல்வது மலைப்பாதையில் செல்வதை சொல்கிறேன் என்றார்..

உடனே நான் அந்த பார்க்கிங்கை பார்க்கிறேன் என்றார். தராளமாக போய் பாருங்கள் நன்றி என்று கூறினார். அப்படியே அங்கிருந்து அமைச்சர் பொன்ராதா கிருண்ஷன் நகன்று சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழத்தில் கஜா புயல் தாக்கி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உருகுலைந்து கிடக்கும் நிலையில் அந்த மக்களை பார்க்க கூட இதுவரை பொன்னார் வரவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் திட்டத்தின் படி சபரிமலைக்கு சென்று கலவரத்தை தூண்ட சென்றிருக்கிறார். ஆனால் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி பொன்னாரை லாவகமாக கையாண்டு அவரது உள்நோக்கத்தை சமூகத்திற்கு அம்பலப்படுத்தியிருக்கிறார் எனவும், எஸ்பி யதிஷ் சந்திராவிற்கும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: