அறந்தாங்கி:
கஜா புயல் தாக்கியதில் அறந்தாங்கியில் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து மின்தடை ஏற்பட்டு 6 நாட்களாகியும் மின் இணைப்பு சில இடங்களில் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மின் சப்ளை இல்லாமல் பெரும்பாலான பகுதி மக்கள் இருளில் மிகுந்த சிரமத்தை அனுபவத்து வருகிறார்கள்.

இதனால் செவ்வாய் அன்று வர்த்தக சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் செக்போஸ்ட்டில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலை அருகே தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ மணிமேகலை, தாசில்தார் கருப்பையா, மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புதன் மாலைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்படும் என்று உறுதி அளித்தனர். இதன்பின் மறியல் கைவிடப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: