திருநெல்வேலி:
கூடங்குளம் முதலாவது அணு உலை, பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்
கட்டுள்ளது. இதில் பழுது நீக்கப்பட்டு செயல்படத் தொடங்கிய மூன்று நாளிலேயே
மீண்டும் பழுதடைந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இந்த இரு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதலாவது உலை, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காகவும் எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிறுத்தப்பட்டது. அந்தப் பணிகள் நிறைவடைந்து சுமார் 109 நாள்களுக்குப் பின்னர், நவம்பர் 17-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு இயக்கப்பட்டது.

அதில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக செவ்வாய்க்கிழமை திடீரென முதலாவது உலை நிறுத்தப்பட்டது. செயல்
படத் தொடங்கிய 3 நாட்களிலேயே உலை யின் டர்பனில் பழுது ஏற்பட்டுள்ளது குறிப்
பிடத்தக்கது. ஏற்கெனவே, பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாவது அணுஉலை, கடந்த செப்டம்பர் 14-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது 960 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.