சிதம்பரம் :கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தவர் சோமசுந்தரம். கஜா புயலில் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் 17 ஆம் தேதி ஈடுபட்டு இருந்தார். அப்போது, சிமெண்ட் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது உடலை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்து அடக்கம் செய்வதில் காவல்துறையினரும், மின்துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டனர். இதனையறிந்த மின்துறை மத்திய அமைப்பு (சிஐடியு), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய தொழிலாளர் சங்கம், விவசாய சங்கத் தலைவர்கள் சம்பவ இடத் திற்கு சென்று உடலை வாங்க மறுத்து 24 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.

பிறகு, சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கியதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இந்நிலையில், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், செயலாளர் பழனிவேல், பொருளாளர் வெங்கடேசன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செயலாளர் இளங்கோவன், கடலூர் மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சோமசுந்தரம் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியதோடு, மின் துறையின் மத்திய அமைப்பு கடலூர் கிளை சார்பாக ரூ. 5 ஆயிரம் நிதியும் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.