கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைப்பட நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் உதவி செய்வதற்கு 2 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மாநிலம் முழுதும் சுமார் 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின் விநியோகமும், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகமும் தடைபட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ( தென்னை – பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை விஜய்யின் மக்கள் தொடர்

பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ( சார்ஜிங் டார்ச்லைட், தென்னை – பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் 2லட்சம் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.