நாகர்கோவில் : விவசாயிகளிடமிருந்து நேரடியாக உணவுபொருட்களை கொள்முதல் செய்ய இந்திய உணவுக்கழகம் (எஃப்.சிஐ) பரிசீலிக்கும் என்று மத்திய உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்பி கூறினார். கன்னியாகுமரியில் இந் திய உணவுக் கழகத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பள்ளிவிளையில் உள்ள மத்திய உணவு பொருள் சேமிப்புப் கிட்டங்கில் இந்திய உணவுக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் கூறியதாவது:-விவசாயிகள் உற்பத்தி செய்கிற நெல் போன்ற தானியங்களை கொள்முதல் செய்யபோதுமான கொள்முதல் நிலையங்கள் தமிழகத்தில் இல்லை. அதன் காரணமாக, சரியான விலை இல்லாதபோது ஏன் மத்திய அரசே நேரடியாக வாங்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தனர்.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்திய உணவுக் கழகம் நேரடியாக கொள் முதல் செய்கிறது. அதேபோல் இங்கும் செய்ய முடியுமா என் பது சிந்தித்து முடிவெடுக்கப்படும். இதுவரை கிடங்கில் சேமித்து வைத்த தானியங் களை பூச்சிகள் சேதப்படுத்தாமல் இருக்க ரசாயன மருந்துகளை பயன்படுத்தி வந்தோம். இந்த முறையால் தானியங்கள் மேலும் கெடும் என்பதால், நாட்டின் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் உள்ள கிட்டங்கிகளில் வசம்பு போன்ற இயற்கை மருந்தினை தண்ணீரில் கரைத்து தெளித்தும், வேப்பிலை, நொச்சியிலை போன்றவற்றை மூடையின் இடையில் பரப்பி வைத்தும் பூச்சியை கட்டுப்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்கின்ற தானியங்களை கொள்முதல் செய்யவும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகமும், இந்திய உணவுக் கழகமும் இணைந்து எப்படி செயல்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவாக சுமார் 400 கொள்முதல் நிலையங்களே உள்ளன. அவைகளின் குறியீடு 20 லட்சம் டன் ஆகும். ஆனால் நவம்பர் மாதம் வரை 1 லட்சத்து 62 ஆயிரம் டன் உணவு பொருளையே தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அப்படி என்றால் இன்னும் 3 மாதத்தில் எப்படி 18 லட்சம் டன்னை கொள்முதல் செய்ய முடியும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் தங்களது நெல் உள்ளிட்ட விளைபொருட் களை தனியாரிடம் விற்பனை செய்யும் அவலநிலை ஏற் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: