மாலை மனுதாரர்களே பிரச்சினைகளுக்கு காரணம், காவல்துறை தலையிடும் கைதும் சரியே என நீதிமன்றம் கூறியதாக ஞாபகம்…
இன்றைய அவசர வழக்கானது சபரிமலையில் பக்தர்களை காவல்துறை பலவந்தமாக தடுத்து கைது செய்தது எனவே அந்த காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை சன்னிதானத்தில் இருந்து வெளியேற்ற மனுதாரர்களான பாஜக, இந்து ஐக்கிய வேதி, ஐயப்பா சேவ சங்கம் போன்ற அமைப்புகள் கோரியது. இதை கேட்ட நீதிபதிகள் உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் 1.45 மணிக்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். அப்படி கைது செய்திருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அரசை எச்சரித்தது.
மதியம் 1.45 மடிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் வந்தார், பாஜக வெளியிட்ட ஒரு சர்குலரை நீதிபதியிடம் கொடுத்தார், இவர்களை தான் கைது செய்தோம் என்றது, நீதிபதிகள் மனுதாரர்களை பார்த்து உங்களது நடவடிக்கை தான் பிரச்சினை மற்றும் கைதுக்கு காரணம் என்றார். எனவே தற்போதைய கைதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிவிட்டது.
மேலும் வழக்கை வியாழக்கிழமை ஒத்தி வைத்த நீதிமன்றம் காவல்துறை பக்தர்கள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் தேவஸ்தானம் என்ன என்ன அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதையும் பதிலுரையாக தாக்கல் செய்ய பணித்தது. இது தான் நீதிமன்றத்தில் நடந்தது

Leave A Reply

%d bloggers like this: