தருமபுரி:  தருமபுரி சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி சைல்டு லைன்(1098)சார்பில் என் நண்பன் வார விழாவையொட்டி பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக சைல்டு லைன் என் நண்பன் கைபட்டை கட்டுதல் நிகழ்ச்சி தருமபுரி துணை கண்காணிப்பாளர் காந்தி துவக்கி வைத்தார். குழந்தை திருமணத்திற்கு காரணம் பெற்றோர்களா ? அல்லது குழந்தைகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் தருமபுரி, அரூர், அதியாமன் கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றது.

மேலும், முக்கல்நாய்கன்பட்டியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதேபோல் தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து நான்கு ரோடு வரை, குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர்நாகலட்சுமி, சைல்டு லைன் இயக்குனர்ஸைன் தாமஸ் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் எபிரான் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தை திருமண தடுப்பு குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.