புதுதில்லி:
1984 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நிகழ்ந்தது. இதுதொடர்பான வழக்கில் தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஜய் பாண்டே செவ்வாயன்று திகார் சிறைக்குச் சென்று தண்டனை விவரங்களை அறிவித்தார். 2 பேரைக் கொலை செய்த யாஷ்பால் சிங் என்பவருக்கு தூக்குத் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான நரேஷ் ஷெராவத்துக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
சாட்சியங்கள் இல்லை என்று கூறி முடிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: