கோவை: கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்(62). இவருக்கு கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதற்காக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து திங்களன்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஒரு சில மணி நேரத்தல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திங்கள் நிலவரப்படி, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு 46 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 72 பேர் என மொத்தம் 124 பேர் காய்ச்சல் பாதிப்பல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: