புதுக்கோட்டை:
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசிடம் நிவாரண நிதிக்
காக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்து வேன் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

கஜா புயல் பாதிப்பை நேரில் பார்வை யிடுவதற்காக செவ்வாய்க்கிழமை புதுக்
கோட்டைக்கு வருகை தந்த முதல்வர் முதலில் புதுக்கோட்டை, மாப்பிள்ளையார் குளம் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களுடன் பார்வையிட்டார்.
பின்னர் சீரமைப்புப் பணிகளில் ஈடு பட்டு வரும் அமைச்சர்கள், முதன்மை செயலாளர்களுடன் ஆலோசனைக்குப் பின் புயலினால் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கி னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டது. தாழ்வான பகுதிகள், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்கிருந்த மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளது.

புயலினால் சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நகர் பகுதிகளில் ஓரிரு தினங்களிலும், கிராமப் பகுதிகளில் ஒரு வாரத்திற் குள்ளும் முழுமையாக மின்விநியோகம் சரி செய்யப்படும்.

புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிப்பது குறித்தும் நிவாரண நிதி வழங்குவதற்காகவும் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளோம். சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தேவையான நிவாரண நிதியை பெற்றுத்தர தமிழக அரசு முயற்சி செய்யும்.பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண பொருட்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று பாதிப்புகள் குறித்து கணக் கெடுக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பின்போது அலுவலர்களை பொதுமக்கள் இடையூறு செய்யாமல் இருந்தால் விரைந்து முடிக்க உதவியாக இருக்கும்.மேலும் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் ஒத்துக்கருத்துடன் இணைந்து செயல்பட்டு மக்களை பாதிப்பில் இருந்து மீட்பதிலும் நிவாரண உதவிகளை வழங்குவதிலும் செயல்பட்டனர். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்கின்றன.இவ்வாறு எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.