திருநெல்வேலி,
33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நெல்லையில் நடைபெற்ற எல்ஐசி உழைக்கும் மகளிர் 7ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நெல்லையில் எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் 7ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ஜெ.விஜயா தலைமை வகித்தார். நெல்லை மகளிர் துணை குழு அமைப்பாளர் ஆர்.கல்பனா வரவேற்று பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவரும் திரைப்பட கலைஞருமான ரோகிணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். காப்பீட்டு கழக இணைசெயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு தலைவர் குன்னிகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கற்பகம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

மாநாட்டில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும், பெண்கள் மீது பெருகி வரும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், எல்.ஐ.சி.யில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பினை வழங்கிட வேண்டும், நான்காம் பிரிவு பணி நியமனங்களில் பெண்களுக்கு உரிய பிரதி நிதித்துவத்தை உறுதி செய்திட வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், எஸ்.சி. – எஸ்.டி. நிலுவை காலியிடங்களுக்கான சிறப்பு பணி நியமனத்தை தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் செந்தில்குமார் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் காப்பீட்டு கழக கோட்ட பொதுச்செயலாளர் செ.முத்துக்குமாரசாமி, கோட்டத் தலைவர் ஆர்,மதுபால், கோட்டப் பொருளாளர் கிருஷ்ணன், இணைச் செயலாளர்கள் ஆர்.பட்டன், ஆர்.எஸ்.செண்பகம், பொன்னையா, துணைத் தலைவர் ஆர்.எஸ்.துரை ராஜ், முன்னாள் பொருளாளர் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டை துவக்கி வைத்து திரைப்பட கலைஞர் ரோகிணி பேசியதாவது : பாலியல் வன்முறை என்பது உடலால் மட்டுமல்ல. உள்ளம் சார்ந்ததாகவும் இருக்கிறது. ஒரு பெண் எப்படிபாதிக்கப்படுகிறாள் என்பதை ஆண்குழந்தைக்கு சிறு வயதிலேயே உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ‘மீடூ’ இயக்கம் வந்த போதுஎங்களுக்கு நன்கு அறிமுகமான வர்கள் மீது குற்றச்சாட்டு வந்தது. பொதுவாக ஆண் குழந்தைகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால் நாம் கவலைப்படுவதில்லை. ஆனால் பெண்கள் தாமதமாக வந்தால் கவலைப்படுகிறோம். இதிலேயே ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை ஒரே நாளில் சரிசெய்ய இயலாது. திரைத்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் பாலியல் பிரச்சனை உள்ளது. பொருளாதாரம் காரணமாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்க்கை யிலும் சிலர் நடித்து கொண்டு இருக்கிறார்கள். பணிபுரியும் இடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்ச னைகள் பற்றி மகளிர் மட்டும் படத்தில்கூறியிருந்தனர். சமூக மருத்துவம் படித்தவர்கள் இதனை சரி செய்யமுன்வர வேண்டும். சமூக வலை தளங்களில் சாதிக்கு எதிராக போராடுபவர்கள் கூட அவர்களது வீட்டில் திருமணம் என்று வந்தால் வேறு நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள். பெண்களுக்கான பாலியல் பிரச்ச னை இந்தியாவில் மட்டுமல்லாது மேல் நாடுகளிலும் இருக்கிறது. நம் அனைவருக்குமே சமத்துவ சமூகம் வேண்டும் என்ற கனவு உள்ளது. அது நம் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.