நாமக்கல்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் 3 வது மாநில மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமையேற்று மாநாட்டுக் கொடியினை ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் கே.இராஜேந்திரப் பிரசாத் வரவேற்றார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம். பாக்கியம் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாநில பொதுச் செயலாளர் இ.மாயமலை, பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ.நிஸார் அகமது மற்றும் பலர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர்  எம். சுப்பிரமணியம் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். வரவேற்புக்குழு செய லாளர் எஸ்.ஜெயபிரகாசம் நன்றி கூறினார்.

நிர்வாகிகள் 

சங்கத்தின் மாநிலத் தலைவராக கே.நாராயணன், பொதுச் செயலாளராக இ.மாயமலை, மாநில பொருளாளராக ஜி. ஆனந்தவல்லி, மாநில துணைத் தலைவராக ஆர். அன்பழகன், ஜெ. கோவிந்தசாமி, டி. மணியம்மாள், எம்.கணேசன், கே.மதிவாணன், துணைப் பொதுச் செயலாளராக ஜே.கட்டபொம் மன், எம்.பரிமளா, மாநில செயலாளர்களாக பி.எல்.சுப்பிரமணியன், எஸ்.தங்கவேல், என்.சுசீலா, பி.ராமசாமி, எஸ்.சொர்ணம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 

தீர்மானங்கள்
இம்மாநாட்டில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, பொங்கல் போனஸ் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர் இறந்தால் ரூ. 50 ஆயிரம் குடும்பநல நிதியும், ஈமக்கிரியை செலவு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்றத்தின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கி பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு பொறுப்பாளர், அங்கன்வாடி பணியாளர் நிலையில் ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர் நிலையில் ரூ.3 லட்சமும் ஒட்டு மொத்தத் தொகையாக வழங்க வேண்டும். கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவிக்காமல் அனைவருக்கும் பாகுபாடற்ற கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.