ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 29 தொகுதிகளில் ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பிரதான கட்சிகள் என்ற வகையில் பாஜக – காங்கிரஸ் கட்சிகள் தற்போதுதான் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை சனிக்கிழமையன்று வெளியிட்டது.

அதில், ஜல்ரபடான் தொகுதியில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் மன்வீந்திர சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மன்வீந்திர சிங், ஷியா தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் பாஜக-விலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.