ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ரூ. 1000 கோடி செலவில் ராமானுஜரின் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, பிரதமர் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி ராமானுஜர் சிலையமைக்கும் பணிகள் துவங்கின. நான்காண்டுகளுக்குப் பிறகு, தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிலை மட்டும் 216 அடி உயரத்திற்கும், பீடத்தையும் சேர்த்து மொத்தம் 302 அடி உயரத்திலும் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ரூ. 3 ஆயிரம் கோடி செலவில், 592 அடி உயரத்திற்கு, சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, 302 அடி உயர ராமானுஜர் சிலையையும் 2019 துவக்கத்தில், திறந்து வைக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.