கள்ளக்குறிச்சி,
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிதியை முறையாக பயன்படுத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இளம் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியொன்றில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் ஏ.தேவி தலைமை தாங்கியும், என்.தனலஷ்மி வரவேற்றும் பேசினர். சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் பி.தேன்மொழி கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார். மருத்துவர் வி.உதயகுமார் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் வி.பிரமிளா நிறைவுரையாற்றினார். யு.அம்பிகா நன்றி கூறினார்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெதிரான குழுக்கள் அமைத்திட வேண்டும், வர்மா குழு பரிந்துரைகளை அமலாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் இ.அலமேலு, துணைத் தலைவர் ஆ.சக்தி, துணைச்செயலாளர் வே.உமாமகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.