தரங்கம்பாடி:
கஜா புயலால் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் ஏராளமான விவசாயப் பயிர்கள் நாசமாகின. பாதிப்புகள் கடுமையாக இருக்கும் சூழலில் வேளாண் உள்ளிட்ட துறை அதிகாரிகள் புயல் வீசி 5 நாளாகியும் இதுவரை பார்வையிட கூட வரவில்லையென பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி கிராமத்தில் என்.சந்திரமோகன் என்பவர் 3 ஏக்கரில் பயிரிட்ட சுமார் 3 ஆயிரம் வாழை மரங்களும் புயலில் அடியோடு முறிந்து விழுந்தன. கடன் வாங்கி சாகுபடி செய்த ஒட்டுமொத்த வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் நாசமானதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.