திருவள்ளூர்,
மணல் கொள்ளை மாபியா கும்பலைஞாயிறு ஏரியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகிலுள்ள ஞாயிறு கிராம ஏரியில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மண்எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. ஆனால், அரசின் சட்ட விதிகளையும் மதிக்காமல் சுமார் 30அடிஆழம் வரை மண் அள்ளி வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி பகுதியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்தை பாதுகாத்து குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் மண் எடுப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, இரண்டு முறை குவாரியை ரத்து செய்கிறோம் என்று எழுத்துப் பூர்வமாக பொன்னேரி வட்டாட்சியர் உறுதியளித்திருந்தார்.

ஆனால் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நவ.18அன்று மண் அள்ளும் இயந்திரங்களை ஏரியை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை தொடங்கினர்.இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த எஸ். கே.மகேந்திரன், “ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு மணல் மாபியா கும்பல் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறது” என்றார்.மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பலை தயவு தாட்சனையின்றி வெளியேற்ற வேண்டும். கரைகளை பலப்படுத்த வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மண் எடுத்துள்ளதால் இந்தகுவாரியை நிரந்தரமாக மூடும் வரைக்கும் போராட்டம் தொடரும் என்றார்.இந்த போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றியச் செயலாளர் ஜி.வி.எல்லையன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இ.ரவி, ஆர். சித்ரா,பி.வி.முனுசாமி, முனிவேல் ராஜா,கிளைச் செயலாளர்கள் வி.ஜெயக்குமார், கே.ஆறுமுகம், பி.லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.