கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டத்தில் சுமார் 20 கிலோ மீ ட்டர் தொலைவில் மலை, காடு சார்ந்த பகுதி அஞ் செட்டி. தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஒன்றாக இருந்தது. இதை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இதனையேற்ற மாநில அரசும் முதலமைச்சரும் அஞ்செட்டி பகுதியை பிரித்து தனி வட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தேன்கனிக்கோட்டை ஒரு வட்டமாகவும், அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு வட்டங்களாக பிரித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அஞ்செட்டி வட்டத்தில் 9 வருவாய் கிராமங்களும் 182 சிறு கிராமங்களும் உள்ளடங்கியுள்ளன.

பெரிய வருவாய் கிராமங்கள் அனைத்து மலை கிராமங்களும். தலித், பழங்குடி, மலைவாழ் மக் களே அதிகம் உள்ளனர். மேலும் 6 வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இந்த வட்டத்தில் அஞ்செட்டி கிழக்கு, சீங் கோட்டை வண்ணாத் திப் பட்டி ,தொட்ட மஞ்சி, கொடகரை, நாட் ராம்பாளையம், கேரட்டி, மஞ்சு கொண்டப்பள்ளி, தக்கட்டி, உரிகம், கோட்டையூர், அத்தி நத்தம், மாடக்கல், கரடிக்கல், ஆகியவை முக்கிய வருவாய் கிராமங்களாகும். புதிய வட்ட அலுவலகத்திற்கு இடம் பார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.