சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், காய்ச்சலுக்கு 4 பேரும் பலியாகியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த துலுக்கானத்தின் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் வந்ததும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் ஒரு வார காலமாக சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஹரி என்பவரும், அவரது மனைவி ரோஜாவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரியும், சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோஜாவும் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த சுல்தான் பேகம் என்ற இளம் பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சாளக்கிபட்டி கிராமத்தை சேர்ந்த வீரசிகாமணி என்ற மூன்று மாத கர்ப்பிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரசிகாமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: