விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா, மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (27) மூன்றாவது பிரசவத்திற்காக இரு வேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தம் குறைவாக உள்ளதாகக் கூறி ரத்தம் ஏற்றியுள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி கவால்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தினர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் தொடர்வதை கண்டித்து சில நாட்களுக்கு முன்பு தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: