“சபரிமலையில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்கக் கூடாது….
அப்படி அனுமதித்தால் சபரிமலையின் புனிதம் கெட்டுப் போய்விடும்” என்று கூறி கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு சபரிமலைக்கு படையெடுக்கும் சங்கிகளில் பலர், அவர்களே கூறும் காரணங்களை மீறும் முரண்பட்ட செயல்களைச் செய்து அம்பலப்பட்டுள்ளனர்…

அதில்…

இந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா என்பவர் கைது செய்யப்பட்டார்…அவர் தன்னை பக்தர் என்று கூறிக்கொண்டு தான் இருமுடிக் கட்டு சகிதமாக சபரிமலைக்கு செல்ல முயன்றார்…

ஆனால் அவர் ஒரு செயல்பாட்டாளர் என்பதோடு பக்தர் என்ற பெயரில் கலவரம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்…

அவர் தன்னை 50 வயதுக்கு மேற்பட்ட பக்தர் என்று கூறியே சபரிமலைக்குள் நுழைய முயன்றார்…

தற்போது…தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி விண்ணப்பித்த மனு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் அவருக்கு 50 வயது நிறைவடையவில்லை என்று நிருபணமாகியுள்ளது….அவரது உண்மையான வயது 49 என்பது தெரிய வந்துள்ளது…

சபரிமலையில் காவலுக்குச் சென்ற பெண்காவலர்களைக் கூட 50 வயதுக்கு மேல் உள்ளவர்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என்று கூறி அவர்களின் அடையாள அட்டையை சாரிபார்ப்பதற்குக் கூட , RSS காரர்கள் முயன்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

RSS காரர்கள் எனில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மீறப்படலாம்…மற்ற சாதரண பக்தர்கள் எனில் சடங்குகள் தான் முக்கியம் என்று கூறுவது போல் RSS-னர் நடந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…

கலவரமே இவர்களின் நோக்கம் என்பது மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டு வருகிறது…

#Save_Sabarimalai_from_RSS
#Ban_RSS

Sadan Thuckalai

Leave a Reply

You must be logged in to post a comment.