மும்பை
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடர் பிரிஸ்பேனில் நாளை (புதனன்று) தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் நோக்கில் இரு அணிகளும் இந்தத் தொடரில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில்,ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் ரஞ்சி ஆட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சம்பந்தப்பட்ட வீரர்களின் கிரிக்கெட் சங்கங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில்,”டி-20 தொடருக்கான இந்திய அணி மட்டுமே ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில்,டெஸ்ட் அணி வீரர்கள் வரும் 24-ஆம் தேதி செல்கின்றனர்.டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் ரஞ்சிக் கோப்பை தொடரில் கலந்துகொள்ளக்கூடாது எனவும்,முகமது ஷமி மட்டும் இன்று (செவ்வாய்) தொடங்கவுள்ள கேரளா அணிக்கெதிரான ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம்.ஆனால்,ஒரு இன்னிங்ஸில் 15 ஓவர்களுக்கு மேல் வீசக்கூடாது” என எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் பயிற்சி ஆட்டம் நவம்பர் 29-ஆம் தொடங்குகிறது.அடிலெய்டு மைதானத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.