சென்னை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நவ.26 அன்று நடைபெறும் அரசாணை எரிப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்த மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை 2009ம் ஆண்டு தமிழக அரசு பறித்தது. எட்டாவது ஊதியக்குழு ஊதிய மாற்றத்திற்கு பிறகு ஆசிரியர்களுக்கு 14 ஆயிரத்து 800 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊதிய இழப்புக்கு காரணமான அரசாணை 234, 303 ஆகியவற்றை நவ.26 அன்றுமாவட்ட தலைநகரங்களில் எரிக்கும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் ஆதரிப்பதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: