அமிர்தரஸ்,

இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் வழிபாட்டுத்தளம் ஒன்றில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதில் 3 பேர் பலியாகினர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள ராஜசன்சி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று வழக்கம்போல் மக்கள் வழிபாடு நடத்த நிரன்கரி பவன் என்ற அரங்கம் ஒன்றில் கூடியிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வழிபாட்டுத்தலத்தினுள் வெடிகுண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் மரணமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் CCTV காமிரா காட்சிகள் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இது ஒரு சமூக குழுவிற்கு எதிராக நடந்துள்ள தீவிரவாத போக்கு என்ற நோக்கில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.