ஈரோடு,

நவம்பர் புரட்சி தின சிறப்புக் கூட்டம் ஈரோடு சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் சிபிஎம் நகரச் செயலாளர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து வரவேற்றார். எம்1 கிளை செயலாளர் வி.சுரேஷ்பாபு நன்றி கூறினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், மின் அரங்க கமிட்டி செயலாளர் சி.ஜோதிமணி, போக்குவரத்து இடைகமிட்டி செயலாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், ரஷ்யப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே பல புரட்சிகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த புரட்சிகளில் மக்களின் வாழ்க்கையில் சுரண்டல் கொள்ளை, வறுமை, உழைப்புச் சுரண்டல், தொழில்துறை முன்னேற்றம், களவாடுதல் லாபத்திற்காக முதலாளிகள் எதையும் செய்வது என தொடர்ந்து நடந்து வந்தது.
1917 நவம்பர் 7ஆம் தேதி ரஷ்யாவில் நடந்த சோசலிச புரட்சியின் விளைவாக தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் பல மாற்றங்கள் ஏற்பட்டது கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடந்த இந்தப் புரட்சியே பல புரட்சிகளில் நிறைவேறாதது அனைத்திற்கும் முடிவு கட்டியது. கொடுமைகள் ஒழித்து, வன்முறை சுரண்டலை தடுத்து, வேலை இழப்பு இல்லாமல் போன்ற சோவியத் யூனியன் புரட்சி பல மாறுதல்களை செய்துள்ளது. மனிதன் மனிதன் சுரண்டும் செயலை எதிர்த்து, சாதிமத பிளவுகளை சரி படுத்தியது. சோவியத் சென்று வந்த ரவீந்திரநாத் தாகூர், பெரியார் போன்றவர்கள் இந்த நிலையையே ஆதரிக்கிறார்கள். இந்தியாவில் இந்த மாற்றம், இந்த புரட்சி ஏற்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.

இரண்டாம் உலகப்போர்
உலகளவில் ஹிட்லர் கொடுங்கோலாட்சியை முடிவு கட்டியது சோசலிசப் புரட்சி. இவை அனைத்திற்கும் தலைவராக சோசலிச யூனியன் புரட்சி ஊன்றுகோலாக இருந்துள்ளது. இந்தப் போர் முடிவுக்கு வந்தது பல நாடுகள் சிதறிக் கிடந்தது அடிமைப்பட்டுக் கிடந்தது. சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்துவதாக உந்துசக்திகள் சோசலிசப் புரட்சியில் உருவானது. சம்பள உயர்வு கூலி, போனஸ், ஊக்கத்தொகை போன்றவற்றை நிர்ணயிப்பதாக இது அமைந்திருந்தது. ஆனால் இந் நிலையில் இருந்த ரஷ்யா சோவியத் யூனியன் இன்று இது சோசலிச நாடாக இல்லை. இது சோசலிசத்தின் தவறு அல்ல, மாறாக ஆட்சியில் வந்து சோசலிசத்தை வழிநடத்தியவர்கள் தவறு மட்டுமே. இந்த புரட்சியானது 70 ஆண்டுகள் பல சாதனைகளையும் உழைப்பின் மகிமையையும், அதற்கான பயன்களையும் கொடுத்துள்ளது. எனவே ஆட்சியில் தவறே, சோசலிசத்தில் தவறல்ல.
சோவியத் யூனியன் புரட்சியை பற்றி கூறும் பொழுது லெனின் புரட்சிக்கு மூளையாகவும் இதயமாகவும் செயல்பட்டு வந்துள்ளார். மார்க்சியம் என்றால் என்ன என்பது குறித்து லெனின் ஒரு ஆய்வு செய்து வெளியிட்டார். புரட்சி நடத்துவதற்காக ரஷ்யாவில் உள்ள நண்பர்கள் யார், எதிரிகள் யார் என வர்க்க யூகத்தை வகித்தார். கட்சியின் ஸ்தாபக கட்டமைப்பை மேம்படுத்தினார். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டுமே புரட்சி நடைபெறவில்லை. மாறாக மூன்று புரட்சிகள் நடந்துள்ளது.
1905 ஆம் ஆண்டு ஜார் மன்னனின் ஆட்சியில் இருந்தபோது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்தில் நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி வீதிகளில் செல்ல திட்டமிட்டனர். ஆனால் கபோன் என்பவர் மன்னரை நேரடியாக அவ்வாறு போராட்டக் களத்தில் நிற்க கூடாது. அவரிடம் தாழ்மையாக கொடுப்போம் என கூறி ஆட்களை சேர்த்து வந்தார். இந்நிலையில் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் சேர வேண்டும் என கட்சி மத்திய குழுவில் முடிவெடுக்கிறது. இதில் அவர்கள் தயாரித்த மனுவில் பேச்சு சுதந்திரம், 8 மணி நேரம் வேலை, சங்கம் அமைக்க அனுமதி போன்ற கோரிக்கைகளை இடம்பெற்றிருந்தது. 1907 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி ஒரு லட்சம் மக்கள் ஒன்று திரண்டு வீதிகளில் ஊர்வலமாக மன்னரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடி மனு அளிக்க சென்றனர். ஆனால் மன்னரின் பாதுகாப்புப் படையில் இருந்தவர்கள் திடீரென அம்மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். சம்பவ இடத்திலேயே ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்த காயங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உரிமை கேட்டதற்கு சுட்டு கொள்வதா என அனைவரும் கோபமுற்றனர். தொழிலாளி சர்வாதிகாரியான ஜார் மன்னன் ஒழிக வேண்டும் என கோஷமிட்டனர். 1917 முதல் 1918 வரை உலக யுத்தம் நடந்தது.
லெனின் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் குறித்து ஒரு ஆய்வு செய்தார். தொழில்துறை, தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் வேண்டும் புதிய சந்தையை தேவைப்படுகிறது பொருளாதாரத்தை ஈட்டுவதற்காக இதன் காரணமாகவே உலகப் போர் ஏற்பட காரணமாக இருந்துள்ளது என ஆய்வில் கண்டறிந்தார்.
ஏகாதிபத்தியம்
1916 – 17 5 அம்சங்கள் இருந்தால் ஏகாதிபத்தியம் என முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து 1917 பிப்ரவரி மீண்டும் ஒரு புரட்சி அன்று லெனின் இருந்த போல்ஸ்விக் கட்சியுடன் தொழிலாளர்களும் சேர்ந்து ஜார் மன்னனை தோற்கடிக்கப்படுகிறது. ஆட்சி முதலாளிகளிடம் வருகிறது. லெனின் ரஷ்யாவில் இல்லையென்றாலும் ரஷ்யாவில் நடக்கும் சூழலை உன்னிப்புடன் கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது தொழிலாளிகள் ஆயுதப் புரட்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து கட்சியின் மத்தியக் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் லெனின். இக்கடிதம் பேசப்பட்டு ஆயுதப் புரட்சிக்கு அனுமதிக்கப்படுகிறது. பெட்ரோகிரேட் என்ற இடத்திற்கு வருகிறார்கள். அக்டோபர் 25 ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனையில் புரட்சி படைகள் தாக்கப்படுகிறது. அரோரா என்ற கப்பலில் இருந்து 2 குண்டுகள் அரண்மனையை தகர்த்து விடுகிறது. இந்நிலையில் சோவியத்திற்கு ஜார் மன்னனிடம் வேலை செய்யும் தொலைபேசி தொலைத்தொடர்பு மன்னர் தோற்று விட்டார் என்ற செய்தி ஒப்புக்கொள்ளவில்லை ஆனாலும் ஒருவழியாக இதனை சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தனர். அதன்பின் லெனின் ஆட்சிக்கு வருகிறார்.
சமாதானம், நிலமற்றவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது என்ற இரண்டு ஆணைகளை வெளியிடுகிறார். தனித்தனியாக இருந்த பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்படுகிறது. அவர்களுக்கு அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை அளிக்கப்பட்டது. சோசலிச யூனியனில் தான் முதலில் கூட்டுப் பண்ணை திட்டம் வந்தது. புதிய சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. சம்பளம், சட்டத்தின்படி அதிகளவில் கொடுக்கப்பட்டது.
1924 முதல் ஏழு வருடங்கள் தொழிலாளர்களுக்கான போடப்பட்ட சட்டங்கள் குறித்து அமைச்சருடன் லெனின் பேசுகையில், பல சட்டங்கள் போடப்பட்டதாலும் அதை பெண்கள் பயன்படுத்திக் கொள்வதில்லையே என்று கேட்டுள்ளார். பெண்களுக்கு பிரதான சமையல், வீட்டு வேலைகள் செய்யப்படுவதால் அவர்கள் இந்த சட்டங்களை பயன்படுத்த முடியவில்லை என்று அமைச்சர்கள் கூறினார்கள். இதனால் மலிவு விலையில் உணவகம், சலவையகம் போன்றவை உருவாக்கப்பட்டது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பகம் போன்றவை உருவாக்கப்பட்டது. பெண்களும் முன்னேறி வந்தனர். விவசாய தளவாடங்களை பெண்கள் பயன்படுத்தும் படி மாநாடு கூட்டி கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொண்டனர். உலகிலேயே முதல்முறையாக ராக்கெட்டில் வேலன்டினா ட்ரஸ்கோ என்ற பெண்ணை விண்வெளிக்கு அனுப்பியது. இதனைப் பார்த்த நாடுகள் 1918 முதல் இளம் சோவியத் யூனியனை பல இடையூறுகளை எதிர் கொள்ள வைத்தது. பொருளாதார தடை விதித்தது இவை அனைத்தையும் முறியடித்து சோவியத்யூனியன். ஆனால் இந்த சோவியத் புரட்சியில் சுமார் 20 கோடி பேர் கொல்லப்பட்டனர். அதாவது மூன்றில் ஒரு பகுதி கொள்ளப்பட்டது. சோசலிசப் புரட்சியின் விளைவாக தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என பெண்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைத்தது. அடிப்படையிலேயே நமது நாட்டிலும் போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் சமவுரிமை கிடைக்கும் என்ற உந்து சக்தியை சோசலிசப் புரட்சி இன்றும் அளித்துவருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.