திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி ஒன்றியம் ஆண்டாங்கரை ’ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கூரை  வீடுகள் ஓட்டு வீடுகளின்  கூரைகள், ஓடுகள் ஒட்டுமொத்தமாக காற்றில் பிடுங்கிக்கொண்டு போய் நாசமாகிவிட்டன. சன்னல் கதவுகள் சேதத்தோடு 20 ஒட்டுக்கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்திலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஊராட்சி ஆண்டாங்கரை ஊராட்சிதான். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அந்த கிராமத்தை சென்றடைந்தபோது அந்த கிராமமே கைவிடப்பட்டது போல் காட்சியளித்தது.   இந்த கிராமத்து மக்கள் பொதுவான இடத்தில் உணவு தயாரித்து வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 16.11.2018 ஒருநாள் மட்டும் அரிசி அளிக்கப்பட்டது. 17.11.2018 அன்று மதியம்  அரிசி அவர்களுக்கு சென்றடையவில்லை.  மிகப்பெரும் நெருக்கடியில் துயரத்தில் உள்ள மாவட்டத்தின் ஒரே நகராட்சி திருத்துறைபூண்டி ஒன்றியம் ஆண்டாங்கரை ஊராட்சியாகும். மாவட்ட நிர்வாகம் இந்த கிராமத்திற்கு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் உணவுப்பொருள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை விநியோகிக்க வேண்டும். இவ்வாறு சிபிஎம் திருவாரூர் மாவட்டக்குழு திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி்யுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.