ஈரோடு,

கோபி என்பீசி நகர் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா பகுதியில் உள்ள என்.பீ.சி. நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியின் மையப்பகுதியில் குப்பை தொட்டி ஒன்று உள்ளது. அப்பகுதிகளில் பயன்படுத்தும் குப்பைகள் அங்கு போடப்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு மாத காலமாக குப்பைகளை அகற்றாமல் அப்பகுதியில் பெரும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெருச்சாளிகள் கழிவுகளை பல பகுதிகளில் எடுத்து செல்கிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, பன்றிக்காய்ச்சல், மலேரியா மற்றும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: