எதுக்குடா படிக்கிறீங்க…
“”””””””””””””””””””””””””””””””””””””””
இந்தியர்களுக்கு கல்வி கற்பது முக்கியம்அல்ல. கல்வியைக் கட்டாயமாக்குவது ஒரு செமிடிக் மதங்களின் சதி என்பது ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு. நாளந்தா, விக்ரமஷீலம் உள்ளிட்ட பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் பவுத்தப் பல்கலைக்கழகங்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

(பார்ப்பனக் கல்வி என்பது வருண அடிப்படையில் குருகுலவாசம் பண்ணுவதுதான்)

எனவேதான் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க ஆட்சி வரும்போதெல்லாம் உய்ர்கல்வி நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன.

JNU வில் 2400 ஆய்வுப் படிப்பு மாணவர் சேர்க்கை என்பது வெறும் 400 என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளதை நான் இரண்டு ஆண்டுகளாகவே சுட்டிக் காட்டி வருகிறேன்.

இன்று ஆண்டுதோறும் JNU பல்கலைக்கழகத்திற்கு நூல்கள் வாங்க ஒதுக்கப்படும் 8 கோடி ரூ என்பது வெறும் 1.7 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வந்துள்ளது. அதுஇ மட்டுமல்ல. புத்தகங்கள் வளாகத்திற்குள்ளே மட்டுமே வைத்துப் படிக்கலாமே ஒழிய இனி வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கக் கூடாதாம்.

“எதுக்குடா படிக்கிறீங்க? போய் குலத் தொழிலை பண்ணுங்கடா..கட்டை விரல் ஜாக்கிரதை”

Leave a Reply

You must be logged in to post a comment.