வங்கக் கடலில் மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை மாலை மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கற்றதழுத்த தாழ்வு மண்டலம்  19, 20ம் தேதிகளில் மேற்கு திசையில், மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக 19, 20, மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழக பகுதிகளில் மழை பெய்யக்கூடும் . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 17 சென்டிமீட்டர், கொடைக்கானலில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மேலும் அரபிக் கடல் பகுதிகளில் 18, 19, 20ம் தேதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தளவில், வரும் 19 அல்லது 20ம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் பரவலாக மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.