திருப்பூர்,
திருப்பூர் குமரன் பூங்காவில் வெள்ளியன்று பெய்த மழையால் பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது.திருப்பூரில், மாநகராட்சியின் சார்பில் திருப்பூர் குமரன் வெள்ளி விழா நினைவு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட்டுவதற்கு உபகரணங்கள் உள்ளன. மேலும் பெரியவர்களுக்கு பொழுதுப்போக்கு இடமாகவும் உள்ளது.இந்நிலையில், வெள்ளியன்று கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் கன மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் சூறை காற்றுடன் ஓரளவு மழை பெய்தது. இதனால், திருப்பூர் குமரன் பூங்காவிலுள்ள பழமையான மரம் சாய்ந்தது.இம்மரம் இரவு நேரத்தில் சாய்ந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை. சாய்ந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: