பானாஜி,

கோவா முதல்வர் கோவா அரசு நிர்வாகத்தின் பொறுப்புகளை உடனே ஒப்படைக்கக்கோரி அம்மாநில பா.ஜ.க கூட்டணி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தீவிர கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த 9 மாதங்களாக கோவா, அமெரிக்கா மற்றும் தில்லி எய்ம்ஸ் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கோவா அரசு நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது, கோவாவில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள மகாராஷ்ட்ராவாதி கௌமந் கட்சி மனோகர் பாரிக்கர் முதல்வர் பதியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

ஒருவரின் உடல்நிலைக்கு கூட முக்கியம் அளிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக மனோகர் பாரிக்கரை முதல்வர் பதவியிலிருந்து விலக்காமல் மத்திய பா.ஜ.க அரசு கோவா மக்களின் நிலைமையை மோசம் அடையச்செய்து வருகிறது என அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.