ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்ணை எக்ஸ்பிரஸ் இரயிலில் இருந்து 1000 கிலோ நாய்கறி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அவ்வப்போது இது போன்று பார்சல் பெட்டிகள் சென்னை ரயில் நிலையத்தில் இறக்கப்படுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உணவு பாதுகாத்து துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை செய்தனர்.

அப்போது 12 பெட்டிகளில் ஆயிரம் கிலோ கறி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை சோதனை செய்த போது, அதில் தோல் உரிக்கப்பட்ட நாய் கறிகள் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மற்ற சில பெட்டிகளில் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு கறிகளை பிரித்து அறியாத அளவிற்கு, சரியான முறையில் பதப்படுத்தாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல மாதங்களாக கறிகள் சென்னை எழும்பூரில் இறக்கப்பட்டு வந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் நாய் கறிகள் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

இதனை தோடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கறிகளை கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.