சேலம்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் பட்டய கணக்காளுக்கான கருத்தரங்கம் சேலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கிற்கு சங்கத்தின் சேலம் பிரிவின் தலைவர் பட்டய கணக்காளர்கள் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். இதில் தற்போதைய சூழ்நிலையில் பட்டய கணக்காளர்களுக்கான நடத்தை நெறிமுறைகள் குறித்து வழக்கறிஞர் ரவி, ஜிஎஸ்டி வரி தற்போது ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து பட்டய கணக்காளர்கள் விக்னேஷ் கிருஷ்ணசாமி மற்றும் உடல் ஆரோக்கியம் பேணுதல் குறித்து மருத்துவர் வெற்றிவேந்தன் ஆகியோர் உரையாற்றினர். மேலும், கூட்டுறவு சங்கங்களின் பட்டய கணக்காளர்கள் மேற்கொள்ள வகை செய்யும் அரசியல் சாசன சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வழக்கறிஞர்கள் போல் பட்டய கணக்காளர்கள் சேமநலநிதி ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: