சென்னை,
‘தமிழீழம் பிறக்கிறது’ என்ற பழ.நெடுமாறனின் நூலை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ‘தமிழீழம்’ என்ற கொள்கை நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை; ஏற்கவில்லை.

ஆனால், அந்தக் கருத்துள்ளவர்கள், தங்கள் நிலையை மக்களின் சிந்தனைக்கு வைப்பதற்குரிய, மறுக்க முடியாத உரிமை ஜனநாயக அரசியல் அமைப்பின் சாரமாக இருந்து வருகிறது. எனவே, அத்தகைய ஜனநாயக உரிமையை, சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துகிற உரிமையை மறுப்பது ஜனநாயக அடிப்படைகளை நிராகரிப்பதாகும். சென்னை உயர்நீதிமன்றமே ‘கருத்துக்களை’ அழிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருப்பது. அரசியல் சாசன உள்ளடக் கத்தை காப்பாற்றுகிற அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது. இத்தகைய தீர்ப்பை உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, பழ.நெடுமாறன் படைப்பு நூலை முழுமையாக அவருக்கு திரும்ப வழங்க வேண்டும்என்று அறிக்கை ஒன்றில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேட்டு கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: