தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டம் எர்ரபையனஅள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் உள்வட்டம் கெலவள்ளி ஆகிய கிராமங்களில் வரும் நவ. 22-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

எர்ரபையனஅள்ளியில் நடைபெறும் இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்ள உள்ளார். இதேபோல், கெலவள்ளியில் நடைபெறும் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்ள உள்ளார். ஆகவே, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தபொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்டஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: