தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப இன்னும் இது போன்று எத்தனை படுகொலைகள் நடக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் கொண்டப்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நந்திஷ்-சுவாதி தம்பதியர் சுவாதியின் பெற்றோரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆணவப்படுகொலையில் மரணமடைந்த சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு நியாயம் கேட்டு ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் கெளசல்யா உள்ளிட்ட பலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் பேசிய பா.ரஞ்சித் தமிழ் சமூகம் சாதிய சமூகமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் மீண்டும் காட்டுவதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் நந்தீஷ் – சுவாதி கொலைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசி உள்ளார்.

“காவிரி, ஜல்லிக்கட்டு என்றால் தமிழர்கள் ஒன்றிணைகிறார்கள். பட்டியல் சமூக மக்கள் தள்ளி நிற்பதில்லை. அவர்களும் தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு போராடுகிறார்கள். ஆனால், சாதி ரீதியாக பட்டியலின மக்கள் கொல்லப்படும்போது மற்றவர்கள் மெளனம் காப்பது ஏன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்புகிறார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப இன்னும் இது போன்று எத்தனை படுகொலைகள் நடக்க வேண்டும் என்று வினவி உள்ளார். அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பின்னர் பேச்சுவார்த்தையின் சுமுக முடிவுக்கு பின்பு ஓசூரில் அரங்கேறிய நந்திஷ் சுவாதி படுகொலையை சாதி ஆணவப் படுகொலையாக அறிவிப்பு வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: